/ கதைகள் / இதயப் பூக்கள்
இதயப் பூக்கள்
மனிதர்களிடம் உள்ள அன்பு, உதவும் எண்ணம், மனிதநேயம், தேசபக்தி போன்ற உயர்வான குணங்களை அழகாக படம் பிடித்துக் காட்டும் சிறுகதை புத்தகம். மற்றவர்களுக்கு உதவியைச் செய்வதிலேயே மன நிறைவின் ரகசியம் அடங்கியுள்ளது என்பதை, கதிர்வேல் என்ற கதாபாத்திரம் கூறும் போது மனம் நிறைந்து விடுகிறது. பண்டிகை என்றாலே சுற்றி உள்ளவர்களையும் மகிழ்விப்பது என்ற கருத்தை முன்வைத்து சரியான கண்ணோட்டத்தை தருகிறார். முள்ளை முள்ளால் எடுப்பது போல் காதல் வலையில் சிக்கிய பெண்ணை காதல் கதையின் மூலமே மருத்துவர் மீட்டெடுத்தது வியக்கச் செய்யும். ராணுவத்தில் பணியாற்றும் வீரர்களின் தேசபக்தியும், அர்ப்பணிப்பு உணர்வும் உணர முடிகிறது. – தி.க.நேத்ரா