/ கவிதைகள் / இளமை தொலைந்தபோது

₹ 260

மரபுக்கும், புதுமைக்கும் பாலம் அமைக்கும் வகையிலான கவிதைகளின் தொகுப்பு நுால். தெளிவான பார்வையுடன் சமூக கருத்துகளை முன்வைத்து படைக்கப்பட்டுள்ளது. பெண்களை மேன்மைப்படுத்தும் விதமாக, ‘மண்ணிலே உயிரினை வளர்க்கிற பெண்ணினம் பாரினில் புரட்சியை படைக்கின்ற புள்ளினம்...’ என குறிப்பிடுகிறது. பொதுவுடைமை சிந்தனையை போற்றும் கருத்துகள் அமைந்துள்ளன. ‘பேருந்து பேசுகிறது’ என்ற தலைப்பில் அமைந்த கவிதையில், ‘அமைதி ஊர்வலம் போறோமுன்னு அனுமதியும் வாங்கி வச்சீங்க... எல்லாத்தையும் மறந்து விட்டு எங்க முகத்தில் குத்துறீங்க...’ என வன்முறையின் தீவிரத்தை எடுத்துரைக்கிறது. உணர்வுகளை வெளிப்படுத்தும் கவிதைகளின் தொகுப்பு நுால். – மதி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை