/ அரசியல் / அரசியல் பயிற்சி
அரசியல் பயிற்சி
அரசியலில் பயிற்சி பெறுவதற்கான வழிமுறைகள் குறித்த நுால். சட்டசபை, லோக்சபா, ஓட்டுரிமை, மக்கள் செயல்பாட்டுக்கு விளக்கம் தருகிறது. அரசியல் என்பது நல்ல சமூகத்தை வடிவமைக்கும் கலை என குறிப்பிடுகிறது. இந்த கலையை பயிற்றுவிக்கும் கையேடாக அமைந்துள்ளது. சிந்தனை செய்யுங்கள், பேச்சுக்கலை, அடிப்படை உரிமைகளும் கடமைகளும், தேர்தல் பரப்புரை போன்ற தலைப்புகளில் தகவல்களை வழங்குகிறது. கட்சி அரசியல் சார்பின்றி உள்ளது. களப்பணி முதல் மேடைப்பேச்சு வரை விளக்கம் தருகிறது. மக்கள் தொடர்பு முதல், தேர்தல் உத்தி வரை வரிசைப்படுத்தி சொல்லப்பட்டுள்ளது. நல்ல தலைவர்கள் உருவாகும் வழிமுறைகள் உள்ளன. அரசியலை தொழிலாக பார்க்காமல் சேவை மனப்பான்மையோடு செயல்பட அறிவுறுத்தும் நுால். – பேராசிரியர் ரா.நாராயணன்




