/ ஆன்மிகம் / ஆன்மீக அறிஞர்கள் மூவர்!

₹ 120

சைவ சமய பெரியோர் மூவர் குறித்து விளக்கும் நுால். அபிராமி பட்டர் வரலாறு முதலில் கூறப்பட்டுள்ளது. அமாவாசை தினத்தில் மன்னனிடம் தவறாக பவுர்ணமி என்று கூறியதால், சோதனையில் அபிராமி அந்தாதி பாடி, அன்னை அருளால் வென்றதாக கூறுகிறது. அபிராமி அந்தாதியின் 100 பாடல்களுக்கும் விளக்கம் தரப்பட்டுள்ளது. திருநாவுக்கரசர் பிறப்பும், வாழ்வில் நடந்த நிகழ்ச்சிகளையும் விரிவாக கூறுகிறது. காரைக்கால் அம்மையாரின் வரலாறு மூன்றாவதாக உள்ளது. காரைக்கால் சிறப்பும், மாங்கனியால் வந்த சோதனையையும் கூறுகிறது. ஈசன் அருள் தந்து, ‘அம்மையே...’ என அழைத்ததும் விளக்கமாக கூறப்பட்டுள்ளது. சைவ அறிஞர்களின் முத்தான வாழ்க்கை வரலாறு கூறும் நுால். – முனைவர் கலியன் சம்பத்து


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை