/ கட்டுரைகள் / அள்ளித்தந்த சூழலும் சொல்லித்தந்த சுற்றங்களும்
அள்ளித்தந்த சூழலும் சொல்லித்தந்த சுற்றங்களும்
புரிதல், மயக்கும் வாசம், நான் எப்போதும் சரியானவன், கவர்ச்சியை தீர்மானிக்கும் வடிவம், பொய் முகம் என, 30 கட்டுரைகளின் தொகுப்பு நுால்.புரிதல் என்பது மற்றவரை அறிவது மட்டுமின்றி தன்னையும் அறிவது தான் என்கிறது. நான் மட்டுமே சரியானவன் என்பதன் தவறை விளக்குகிறது. எதிர்மறை எண்ணங்களுக்கு உட்படும் போது, புதிய வழி வகைகளை கையாளும் வகையில் தள்ளப்படுவோம். இருப்பினும் அவை இழப்பையே ஏற்படுத்தக்கூடும் என்கிறது.தலைப்பிற்கு பொருள் உணர்த்தும் வகையில் கட்டுரைகள் அமைந்துள்ளன. வாசித்து முடித்தவுடன் தன்னைத் தானே சுய பரிசோதனைக்கு உட்படுத்தும் எண்ணம் மேலோங்கும். நல்ல மாற்றத்திற்கு தெளிவு பிறக்கும்.– வி.விஷ்வா