/ பெண்கள் / வண்ணக்கோலங்கள்

₹ 500

விதம் விதமான வடிவம் மற்றும் வண்ணங்களில் மலர்ந்துள்ள கோல மாதிரிகளின் தொகுப்பு நுால். புத்தகத்தில் பக்கத்துக்கு ஒன்றாக அமைந்து வழிகாட்டியாக கவருகிறது. பல்வேறு வடிவங்களில் எழில் சிந்தும் கோல மாதிரி படங்கள் தரப்பட்டுள்ளன. அதில் பயன் படுத்தப்பட்டுள்ள வண்ணங்களும், வரையப்பட்ட வடிவங்களும் சிந்தனைக்கு விருந்தாக அமைந்துள்ளன. கோலங்கள் வரைய தேவையான கோடுகளின் வளைவுகள் ஒவ்வொன்றையும் உற்று கவனித்து, அன்றாடம் வீட்டு வாசலில் கோலம் போட உதவியாக தெளிவாக தரப்பட்டுள்ளது. தரமான தாளில் வண்ணமயமாக அச்சிடப்பட்டுள்ளது. புதிய வகை முயற்சியாக ரசனையை வெளிப்படுத்துகின்றன. அன்றாடம் அதிகாலை வீட்டு வாசலில் கோலம் போடுவதற்கு தக்க வழிகாட்டும் நுால். – ராம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை