/ ஆன்மிகம் / திருவாசகம் பெரியண்ணன் உரை
திருவாசகம் பெரியண்ணன் உரை
தெளிவுரையுடன் அமைந்த திருவாசக நுால். மாணிக்கவாசகரின் திருவாசகம், சிவபுராணம் முதல் அச்சோப்பதிகம் வரை 51 தலைப்புகளில் உள்ளது. ஒவ்வொரு தலைப்பிலும் பாடல்கள் அமைந்த யாப்பு பற்றி குறிப்பு தருகிறது. மெய் உணர்தல் முதல், ஆனந்த அதீதம் வரை 10 பதிகங்கள் விளக்கப்பட்டுள்ளன. நீத்தல் விண்ணப்பம், கட்டளை கலித்துறையில் அமைந்துள்ளதை குறிப்பிடுகிறது. திருவெம்பாவை பாடல்கள் கொச்சகக் கலிப்பா என்கிறது. மாணிக்கவாசகர் பாடல்களுக்கு, உரை கூறப்பட்டுள்ளது. ஆன்மிக அன்பர்களுக்கு பயன் தரும் நுால். – முனைவர் கலியன் சம்பத்து




