/ தமிழ்மொழி / திருக்குறள் தெளிவுரை
திருக்குறள் தெளிவுரை
குறள் பாக்களுக்கு எழுதப்பட்ட உரை நுால். பல நுாற்றாண்டுகளுக்கு முற்பட்டதாக இருந்தாலும், இன்றும் உயிர்ப்புடன் விளங்கும் திருக்குறளுக்கு புதிய கோணத்தில் கருத்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பகுத்தறிவு கொள்கைகளுக்கு மாறுபடாமல் முற்போக்கு சிந்தனையுடன் தெளிவாக உரை அமைந்திருக்கிறது. வள்ளுவர் வாழ்ந்த காலத்து நம்பிக்கைகள், பண்பாடு, பார்வைகளிலிருந்து மாறுபடாமல் வலிந்து திணிக்காமல் மற்றொரு பார்வையை முன் வைக்கப்பட்டுள்ளது. வழிபாட்டுக்கு விளக்கம், பெண்களின் மதிப்பு உயர்வு வியந்து கூறப்பட்டுள்ளது. முதிர்ச்சியான அனுபவத்தை வெளிப்படுத்துகிறது. சொல்லாடையால் அழகுற போர்த்தி இருக்கிறது. அற இலக்கியத்துக்கு முற்போக்கு சிந்தனையுடன் எழுதப்பட்ட உரை நுால். – ஊஞ்சல் பிரபு




