/ கவிதைகள் / தனியாகவா இருக்கிறாய்

₹ 120

வாழ்வில் நம்பிக்கை ஏற்படுத்தும் கவிதைகளின் தொகுப்பு நுால். கோபுரம், தனியாகவா இருக்கிறாய், எங்கிருந்தோ பார்க் கிறார், உன்னிடம் ஓடி வர வேண்டும், பிரிவே சுகமோ உட்பட, 35 தலைப்புகளில் கவிதைகள் உள்ளன. வேறுபாடான மனப்பாங்கு வெளிப்பட்டுள்ளது. முதல் கவிதை தேடலுடன் அமைந்துள்ளது. அடுத்து வித்தியாசமான கருவுடன் இன்றைய உலகத்தை எதிர் கொள்ள வழிகாட்டுகிறது. தனியாக இருக்கும் ஒருவரிடம் சமூகம் எழுப்பும் கேள்விகளுக்கு, ‘தன்மானத்துடன் இருக்கிறேன்’ என உரைப்பது பொட்டில் அடித்தது போல் உணர்த்துகிறது. தனித்து போராடுவோருக்கு நம்பிக்கை ஊட்டுவதாக உள்ளது. முயற்சியுடன் முன்னேறுவதற்கு வழிகாட்டியாய் நம்பிக்கையூட்டும் கவிதைகளுடன் அமைந்த தொகுப்பு நுால். – மதி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை