/ இலக்கியம் / புதிய உரைநடை
புதிய உரைநடை
உரைநடை ஆராய்ச்சி குறித்து எழுதப்பட்ட கட்டுரை நுால். கடந்த 1981ல் சாகித்திய அகாதெமி விருதை பெற்றுள்ளது. உரைநடை வடிவத்துக்கு இலக்கணம் அமைக்கும் முயற்சியுடன் உருவாக்கப்பட்டுள்ளது. மொத்தம் மூன்று பகுதிகளாக அமைந்துள்ளது. உரைநடையின் பொது வடிவம், சொற்கள், வாக்கியம், பத்தி, உரைநடை ஒலிநயம் உட்பட, ஒன்பது கட்டுரைகள் முதல் பகுதியில் உள்ளன. அடுத்து, எடுத்துரை உரைநடை, வருணனை உரைநடை, விளக்க உரைநடை, உரைநடை இன்பம் என்ற தலைப்புகளில் தகவல்கள் தரப்பட்டுள்ளன. தொடர்ந்து பிற்சேர்க்கையாக பயன்பட்ட நுால்களின் பட்டியல் மூன்று விதமாக பிரித்து வழங்கப்பட்டுள்ளன. உரைநடையின் சிறப்பை வெளிப்படுத்தி மேம்படுத்தும் வகையில் கருத்துகளை கொண்டுள்ளது. உரைநடை குறித்த ஆய்வாக மலர்ந்துள்ள நுால். – ராம்




