/ கவிதைகள் / நினைத்ததைச் சொல்கிறேன்
நினைத்ததைச் சொல்கிறேன்
எண்ணிய கருத்தை நகைச்சுவை மிளிர முன்வைக்கும் கவிதைகளின் தொகுப்பு நுால். ‘தேய்ந்து போ’ என்ற தலைப்பில், ‘அச்சத்துடன் ஆண்டுகள் நுாறு அவனியில் வாழ்தலிலும் துணிச்சலோடு தொலைந்து போவது மேல்!’ என துவங்கி, ‘நிலவு தேய்ந்து போவது போல் தேய்வதற்கு பழகு... அப்போது வளர்வாய்...’ என நம்பிக்கையூட்டுகிறது. ‘குடிகாரர்களை திட்டாதீர்’ என்ற தலைப்பில் குடிப்பழக்கம் குறித்து அமைந்த கவிதை பல தகவல்களை தருகிறது. ‘அறிவின் அளவு’ என்ற தலைப்பில், குருவிகளுக்கு ஏற்படும் படபடப்பை, ‘இதயத்தோடு சேர்ந்து இறக்கைகளும் துடிக்கின்றன’ என நுட்பமாக படம் பிடித்துள்ளது. வாழ்வை புதுமையுடன் நோக்கும் கருத்துள்ள கவிதைகளின் தொகுப்பு நுால். – ஒளி




