/ சுய முன்னேற்றம் / நினைப்பது நடக்கும்
நினைப்பது நடக்கும்
தன்னம்பிக்கையுடன் வாழ்வை எதிர்கொள்ள வழிகாட்டும் கருத்துகள் உடைய நுால். வாழ்வில் நினைப்பதை நடக்க வைக்க என்ன செய்ய வேண்டும் என்பதற்கு அறிவுரைகள் தரப்பட்டுள்ளன. நினைப்பது நடக்கும், நினைப்பது நடக்கவில்லை என்றால் நீங்க நல்லா இருக்கணும், எண்ணமற்ற நிலையில் இருந்து பழகுங்கள் என்பது உட்பட, 21 தலைப்புகளில் தன்னம்பிக்கை கருத்துகள் தொகுக்கப்பட்டுள்ளன. எண்ணங்களை புதிப்பித்து வாழ்வதற்கு வழிகாட்டுகிறது. தன்னிலை மறந்து செயல்படுவது, தன்னம்பிக்கையுடன் இருப்பது பற்றி எளிமையாக கருத்துகள் கூறப்பட்டுள்ளன. வெற்றி, தோல்வி எப்போதும் வாழ்வின் திசையை நிர்ணயிக்காது என்கிறது. எண்ணியதை சாதித்து வாழ்வில் முன்னேற்றம் பெற வழிகாட்டும் நுால். – ராம்




