/ தமிழ்மொழி / நெருப்பலையார் ஆத்திசூடி

₹ 150

புதிய ஆத்திசூடி நுால். தமிழ் வளர்ச்சி துறையின் பரிசு பெற்றது. உயிர், மெய் மற்றும் உயிர்மெய் எழுத்து அடிப்படையில் 114 ஆத்திசூடி கொண்டது. திட்டமிட்டு சிந்தித்து புதிய கருத்துகள் உருவாக்கப்பட்டுள்ளன. நிகழ்காலத்திற்கு ஏற்றவாறு விளக்கமான உரையும் எழுதப்பட்டுள்ளது. நடைமுறை வாழ்க்கையை முன்வைத்து கவிதைகள் படைக்கப் பட்டுள்ளன. இதில் கூறப்பட்டுள்ள கருத்துகள் வாழ்க்கைக்கு ஏற்றதாக உள்ளன. உதாரணமாக, ‘கையை நம்பி வாழ்’ என்பதற்கு உரையாக தொழிலாளர் உழைப்பை முதன்மைப்படுத்துவதாக உள்ளது. நேர்மையாக பாடுபட்டு உழைத்து வருவாய் ஈட்டும் தன் கையே தனக்குதவி என சுட்டிக்காட்டுகிறது. சிறுவர், பெரியோருக்கு பயன் தரும் நுால். – வி.ராமலிங்கம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை