/ ஆன்மிகம் / நம்மாழ்வார்

₹ 230

கயிற்றில் வித்தை காட்டும் கழைக் கூத்தாடி போல எழுத்தில் வித்தை காட்டி ஆட்டுவிக்கும் நுால். வார்த்தைகள் படமாக மனக்கண்ணில் விரிந்து சிரிக்க, சிந்திக்க, அழ வைத்து நாடகமாடும். சான்றின் ஒரு பருக்கையாக, கிஸ்னா... என் கூட்டுக்காரா ஆச்சார்யா கதாபாத்திரங்களைச் சொல்லலாம். அழகனை, ஆன்மஞானம் தருபவனை, அலங்கார பூஷிதனை நேசிக்க கோவிலுக்குச் செல்லும் மனம்... அழகற்ற, புற உணர்வற்ற, புறந்துாய்மையற்ற ஒருவன் மேல் பரிதாபம் கொள்கிறது எனில், மனமும் ஒரு கோவில் தான். அன்பும், ஆன்மிகமும் சாகவில்லை என்பதை தலைமை அர்ச்சகர் மனதின் வாயிலாக உணரவைக்கிறது. கிஸ்னா அவனை கஷ்டப்படுத்தாதே... என்று துடிக்கிறது. ஆண்டவன் மேல் காட்டும் அன்பை விட, அடியார்கள் மேல் காட்டும் அன்பு உன்னதம் என்பதை இக்கதை உணர்த்துகிறது. அன்பு குறைவை அன்பு சோகை என்று அழகாக விளக்குகிறார்.கவிஞனும், கைதியும் ஆழ்வார் பாசுரத்திற்குள் ஒன்றி தங்களை தொலைத்த கதை இன்னும் நம் மனதை மேம்பட வைக்கிறது. புத்தகத்தை படிக்கும் போது மனமும் பாசுரங்களால் நிரம்பி வழியும்.– எம்.எம்.ஜெ.,