/ வாழ்க்கை வரலாறு / மீண்டும் மகாத்மா
மீண்டும் மகாத்மா
சமூகசேவகர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் குறித்து முப்பரிமாணத்தில் விரியும் நுால். ஜெயப்பிரகாஷ் ஆளுமை குறித்து, அவர் நடத்திய போராட்டங்களை விவரிக்கிறது. வித்தையை விவரிக்காமல் விளைவை விளக்குவது சிறப்பாக உள்ளது. அவர் மீது காந்திஜி கொண்டிருந்த எண்ணம், நேருவுடனான சந்திப்பு, முரண்பாடு, கொள்கை பிடிப்பு என அறிய வேண்டிய விஷயங்கள் உள்ளன. காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மீது கொண்டிருந்த பார்வை தெளிவாக எடுத்து சொல்லப்பட்டிருக்கிறது. அமெரிக்க மண்ணில் அதிசய ராகம், சிறைக்குள் ஒரு செம்போத்து, நீண்ட நாடகத்தின் கடைசி கட்டம் என தலைப்புகளிலும் கருத்துகள் தரப்பட்டுள்ளன. ஜெயப்பிரகாஷ் என்ற ஆளுமையால் தேசத்துக்கு என்ன விளைந்தது என்பதை எடுத்துரைக்கும் நுால். – ஊஞ்சல் பிரபு




