/ சிறுவர்கள் பகுதி / மழை வருது

₹ 70

இனிய ஓசை நயத்துடன் அமைந்த சிறுவர் பாடல்களின் தொகுப்பு நுால். ஒழுக்கம் நிறைந்த வாழ்க்கையை துாண்டும் வகையில் அமைந்துள்ளது. சிறுவர் -– சிறுமியர் உற்சாகத்துடன் பாடுவதற்கு ஏற்ற வகையில் பல தலைப்புகளில் உருவாக்கப்பட்டுள்ளன. பாப்பா பாப்பா பாடு, முதியோரை மதித்திடு பாப்பா, சின்னஞ்சிறிய பாப்பா, வீதியில் விளையாடுவோமா, கதைகள் கேட்போமா உட்பட எளிய தலைப்புகளில் அமைந்துள்ளன. முதியோரை மதித்தல், இயற்கையை அறிதல் என பல அறிவு செயல்பாடுகள் பாடல்கள் வழியாக புகட்டப்பட்டுள்ளன. சுத்தம் பேணுதல், பொது இடங்களை பராமரித்தல் போன்ற நற்செயல்கள் சிறுவர் -– சிறுமியர் மனதில் பதியும்படி சொல்லப் பட்டுள்ளன. சிறுவர் பாடல்களின் தொகுப்பு நுால். – ஒளி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை