/ கதைகள் / மாறும் காலங்கள்
மாறும் காலங்கள்
உள்ளத்தில் நங்கூரமிட்டு தங்கும்படியாக உள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால். காலம் மாறும்போது, உறவும், உன்னதமும் பின்னுக்கு தள்ளப்படுவதை அழுத்தமாக பதியவைக்கும் கதை, கனிவு, கண்ணியம் கரைந்து போகக்கூடியதா என எண்ண வைக்கிறது. உலகம் போற்றும் பாடகி மனதில் நடக்கும் போராட்டங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. பிற்போக்கு சிந்தனை மாறாத மனங்களை படம் பிடிக்கிறது இன்னொரு கதை. சில கதைகள், படித்தவுடன் மனதை ஒரு பாரம் அழுத்துவது போல் உணரவைக்கின்றன. எளிய நடையில், உண்மையில் நடந்த சம்பவங்களோ என சிந்திக்க வைக்கும் வகையில் சிறுகதைகளில் கற்பனை வளமும், கருத்து தரமும் வியப்யை ஏற்படுத்துகிறது. பிரமிக்க வைக்கும் படைப்புகளுடன் மலர்ந்துள்ள நுால். – டாக்டர் கார்முகிலோன்




