/ உளவியல் / மனசுக்குள்ளே ஒரு ஜென் பயணம்!

₹ 230

வாழ்க்கையை அமைதியாக அமைத்துக்கொள்ள உதவும் நுால். மூளையின் செயல்பாடுகளில் இருந்து வெளிப்படும் நல்லது, கெட்டதை விளக்குகிறது. ஆழ்மனதில் இருந்து வெளிப்படும் உணர்வுகளை பரிசோதிக்க முடியும் என்கிறது. இறந்தோர் கனவில் வரும் காரணத்தை கூறுகிறது. கண்ணாடி முன் நின்று தியானித்தால், ஆழ்மன செயல்பாடுகளை கணிக்க முடியும் என கற்பிக்கிறது. அவசியம் இல்லாத சிந்தனைகளை விட்டுவிட ஆலோசனை கூறுகிறது. ஹார்மோன் செயல்பாடுகளால் ஏற்படும் விளைவுகளையும் விளக்குகிறது. பயத்தை போக்க கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறையை சொல்கிறது. மூளையில் இருக்கும் நகைச்சுவை உணர்வை தட்டி எழுப்ப முடியும் என்கிறது. ஆழ்மனதில் இருந்து ஆற்றலை எழுப்பும் நுட்பங்களை அலசும் நுால். – டி.எஸ்.ராயன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை