/ இலக்கியம் / குறிஞ்சிப்பாட்டு ஆய்வுரை

₹ 125

பழந்தமிழ் இலக்கியமான குறிஞ்சிப்பாட்டுக்கு ஆய்வுரை தரும் நுால். கட்டமைப்பு பற்றி தெளிவாக எடுத்து கூறுகிறது. துணை நுாற்பட்டியல் தவிர ஏழு இயல்களுடன் அமைந்துள்ளது இந்த புத்தகம். குறிஞ்சிப்பாட்டில் உள்ள திணை, துறை அமைப்புகள் பற்றி முதலில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, பாடல்களின் கட்டமைப்பை ஆராய்ந்து கருத்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பாடல்களை எழுதிய பழம்புலவர் கபிலர் குறித்த செய்திகள் தனி அத்தியாயமாக தரப்பட்டுள்ளது. குறிஞ்சிப்பாட்டில் உள்ள மூலச்செய்திகள் குறித்தும் தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. பாடல் கருத்துகள் தனித்துவமாக அலசப்பட்டு, செய்திகள் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. பழந்தமிழரின் பண்பாட்டை வெளிப்படுத்தும் ஆய்வு நுால். – மதி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை