/ கதைகள் / குலக்கதை (பாகம் – 1)
குலக்கதை (பாகம் – 1)
கிராமத்து குடும்பங்களில் நடக்கும் சடங்குகள், நடைமுறைகள் குறித்து புனைவாக படைக்கப்பட்டுள்ள நாவல். கதை மூன்று நுாற்றாண்டு களுக்கு முன்பான களத்தில் நடப்பதாக கூறப்பட்டுள்ளது. வைகை ஆற்றோரம் நடப்பதாக கூறப்பட்டுள்ள வர்ணனைகள் ஈர்க்கின்றன. சித்திரை, கோதை, கன்னிகை என்ற கதாபாத்திரங்களை சுற்றி கதையோட்டம் அமைந்துள்ளது. நெருடல் இல்லாமல் கதை சொல்லும் பாணி இயல்பாக அமைந்து ஈர்க்கிறது. வட்டார வழக்கு நடையில் உரையாடலுடன் கிராம வாழ்க்கையை படம் பிடிக்கிறது. இயற்கை பேரழிவு, இறப்பு, குடும்ப சிக்கல் என நிகழ்வுகள் சங்கிலியாக அமைந்து நகர்கிறது. இறுதியில் சித்திரை அரூபமாக வர, கன்னிகை பற்றிய கேள்வியுடன் முடிகிறது நாவல். – கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு




