/ கதைகள் / கொண்டை ஊசி வளைவில் புதிய வானம்
கொண்டை ஊசி வளைவில் புதிய வானம்
மனித உணர்வலைகளை எடுத்துரைக்கும் ஜென் கதைகளின் தொகுப்பு நுால். அன்பை பரப்ப இளைஞர் எடுத்த முடிவை, நிலமெங்கும் வானம் கதை பகிர்கிறது. விவசாயிகள் நிலத்தை கபளீகரம் செய்யும் முடிவை, காய்த்து முறியும் மரம் கதை எச்சரிக்கையாக காட்டுகிறது. நேர்மையாக கிடைக்க வேண்டிய பதவி உயர்வு பறிபோனதால் வாடுபவருக்கு துறவி கூறும் அறிவுரை ஊக்கம் அளிக்கிறது. கதை முடிவில், ஹைக்கூ கவிதையை பொருத்தி சுவாரசியம் ஏற்படுத்துகிறது. கையில் இருப்பதை வைத்து நிறைவடையாத மனிதர், அதிகமாக கிடைத்தாலும் நிறைவடைவதில்லை. மனதிருப்தி அடைய வேண்டும் என்கிறது. ஒவ்வொரு கதையும், ஜென் தத்துவத்துடன், வாழ்வின் உண்மைகளை கூறுகிறது. டி.எஸ்.ராயன்