/ கதைகள் / கருணாகரன் எனும் பாக்கியவான்!
கருணாகரன் எனும் பாக்கியவான்!
கிராமம் ஒன்றில் வறுமையில் வாடிய குடும்பத்தை மையமாக உடைய நாவல் நுால். திருமணமாகி 10 ஆண்டுகளாகியும் குழந்தைப்பேறு இல்லாத கந்தசாமி- – கஸ்துாரி தம்பதிக்கு, குடுகுடுப்பைக்காரன் ஒரு நாள் அதிகாலை சொன்ன செய்தி பலித்தது. ஆண் குழந்தை பிறந்தது. இக்கதையில், 90 ஆண்டுகளுக்கு முற்பட்ட வழக்கப்படி இனிப்பாக பனங்கற்கண்டு, கருப்பட்டி வழங்கப்பட்டதை சுவைபட குறிப்பிட்டுள்ளது. குழந்தைக்கு கருணாகரன் என பெயரிட்டு, படிப்படியாக வளர்ந்து படிப்பில் முன்னேறி, பெரும் தொழிலதிபராகி ஊரே மெச்சுமளவிற்கு புகழ் பெற்றது தான் நாவலின் மையக்கரு. உழைப்பால் உயர்வு ஏற்படும் என்ற கருத்தை உடையது. அதீத கற்பனை மற்றும் உரையாடல்கள் இன்றி அமைந்த நுால். – பின்னலுார் விவேகன்




