/ கதைகள் / கனவே கலையாதே...!
கனவே கலையாதே...!
திருப்பங்களுடன் அமைந்த சிறுகதை களின் தொகுப்பு நுால். ரயில் பயணம் பற்றி சில கதைகள் சொல்லப்பட்டு இருக்கின்றன. சத்தியத்துக்கு சோதனை வந்தால் என்ன ஆகும் என ஒரு கதை குறிப்பிடுகிறது. கல்லுாரியில் படித்த காலம் நினைவில் வருகிறது. படைப்பை உருவாக்கியவரே ரயில் பயணியாக வருவதாக, ‘பகல் கனவு’ கதை ஆச்சரியமூட்டுகிறது. குளுகுளு வாசஸ்தலமான மூணாறை வர்ணித்துள்ள விதம், படிப்பவரை போய் வர துாண்டுகிறது. கதை முடிவில் அதிர்ச்சி காத்திருக்கிறது. ஒன்று புது ஜோடி; இன்னொன்று பழைய ஜோடி. தேன் நிலவின் போது பயமுறுத்தி பணம் பறிப்பதாக பழைய ஜோடியை சித்தரித்து அதிர்ச்சி ஊட்டுகிறது. காலமும் ஞாபக மறதியும் மிகப்பெரிய மருந்துகள் என்பதை உணர்த்தும் சிறுகதை நுால். – சீத்தலைச்சாத்தன்




