/ ஜோதிடம் / ஜோதிடம் பார்க்கலாம்... வாங்க!
ஜோதிடம் பார்க்கலாம்... வாங்க!
தோல்வி குழப்பங்களை நீக்கி வெற்றிக்கு வழிகாட்டும் ஜோதிட நுால். தமிழ் வருடம், மாதம், அயனம், திதி, ருது, யோகம், கர்ணம், கிரகங்கள், ஏழரை சனி, கால சர்ப்ப தோஷம், கிரக காரத்துவம், ராசிகள், அம்சம், பஞ்ச மகா புருஷ யோகம், ராசியில் நட்சத்திரம், லக்ன பலன்கள் குறித்து விளக்கப்பட்டுள்ளது. வராகமிரர், பட்டோத்பவர், கல்யாண வர்மா ஆகியோர் பராசர முனிவருக்கு பின் ஜோதிடக் கலைக்கு உயிர் கொடுத்தது பற்றி கூறப்பட்டுள்ளது. ராசிகளுக்கு என தனி நிறம், குணம், உடலில் இருக்கும் இடம், வியாபித்து இருக்கும் நேரம் பற்றிய விபரங்கள் உள்ளன. குடும்பம், வீடு, பூர்வ புண்ணியம், நோய், ஆயுளை ஜாதகத்தால் அறியலாம் என்கிறது. ஜோதிட செய்திகள் நிறைந்த நுால். – முனைவர் மா.கி.ரமணன்




