/ கதைகள் / புரட்சிப் பாதையில் புதுமைப் பெண்கள்
புரட்சிப் பாதையில் புதுமைப் பெண்கள்
அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றும் மூன்று பெண்களை மையமாக கொண்ட நாவல் நுால். ஒரு கிராம கல்விக்கூடத்தில் ஆசிரியையாக பணிபுரிகிறாள் வானதி. மனிதாபிமானமிக்க காவல் துறை அதிகாரியாக பணியாற்றுகிறாள் தமிழரசி. உயிரின் மதிப்பு உயர்ந்தது என பணியாற்றும் மருத்துவர் மாலதி. இந்த மூன்று பெண்களை சுற்றி சுழல்கிறது. இளம் பருவ காதலால் ஏற்படும் அடிதடி, கணவன் – மனைவி புரிந்து கொள்ளாத தன்மையால் ஏற்படும் சிக்கல்களை பேசுகிறது. பெரியவர்களை பார்த்து குடி போதையை கடைப்பிடிப்போரை சீர் செய்வதை சம்பவங்கள் வாயிலாக சொல்கிறது. எதை நினைத்தாலும் பேசினாலும் செய்தாலும் சந்தோஷம் இருந்தால், வாழ்க்கையில் பிரச்னை வராது என்ற கருத்துள்ள நுால். – சீத்தலைச்சாத்தன்




