/ வாழ்க்கை வரலாறு / டாக்டர் ரங்காசாரி

₹ 400

பிரபல மருத்துவர் மறைந்த ரங்காசாரியின் வாழ்க்கை நிகழ்வுகளை கோர்த்து உருவாக்கப்பட்டுள்ள நாவல் நுால். தனித்தன்மையுடன் மருத்துவ சேவையை செய்து வந்தவர் ரங்காசாரி. அவரது வாழ்க்கையில் நடந்த முக்கிய நிகழ்வுகளை, உரியவர்களுடன் நேர்முகம் செய்து தொகுத்து நாவல் போல் தரப்பட்டுள்ளது. இதை உருவாக்கிய எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் நுாற்றாண்டை ஒட்டி மறுபதிப்பாக வெளியிடப்பட்டுள்ளது. டாக்டர் ரங்காசாரியின் இளமை பருவம், கல்வி சிறப்பு, பழகும் இயல்புகள், பழக்க வழக்கங்கள், அயராத மருத்துவ சேவை, உழைப்பில் காட்டிய அக்கறை என படிப்படியாக தரப்பட்டுள்ளது. எளிய சித்தரிப்புகளாக உள்ளன. மருத்துவ சேவையால் மக்கள் மனதில் இடம்பெற்றவரின் வாழ்க்கை வரலாறு நுால். – ராம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை