/ கவிதைகள் / திவ்ய தரிசனம் துளிப் பாடல்கள்

₹ 50

எளிய நடையில் எழுதப்பட்ட சிறிய கவிதைகளின் தொகுப்பு நுால். அரசியல், ஆன்மிகம், ஆரோக்கியம், காதல், சமூகம், தத்துவம், திருவிழா போன்றவை பற்றி படைக்கப்பட்டுள்ளன. அரசியல் குறித்து, ‘எந்த கட்சியில் இருந்தாலும் ஆட்சியில் இடம் பிடிப்பது பணம், அமைச்சர் தாடி வளர்த்தால் அதற்குள்ளும் இருக்கும் ஒரு ரகசியம்’ என நையாண்டி தொனிக்க விமர்சனமாக முன்வைக்கிறது. ஆன்மிகத்தை, ‘முடிவு தெரியாத வாழ்க்கையில் எடுக்கும் முடிவுகள் தான் முடிவு நோக்கி பயணிக்க வைக்கும்’ என யதார்த்தமாக அறிமுகம் செய்கிறது. ஆரோக்கியம் என எழுதப்பட்ட கவிதையில், ‘அதிகாரம் என்பது அதிகமான காரம் அகங்காரம் தரும்’ என சுட்டிக்காட்டி சுவையூட்டும் நுால். – சிவா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை