/ இசை, இயல், நாடகம் / சினிமா கொட்டகை

₹ 500

சினிமா இயக்குநர் வி.சி.குகநாதன் சினிமா அனுபவங்களை விவரிக்கும் சுயசரிதை நுால். சினிமா தொழிலில் தனித்துவ அடையாளத்துடன் செயல்பட்டதை விவரிக்கிறது. ஒரு கதையை எப்படி படமாக்குவது, எந்த நடிகரை நடிக்க வைத்தால் வியாபாரம் ஆகும் என சூட்சுமத்தை எடுத்து சொல்கிறது. அந்த காலத்தில் திரைப்பட பிரமுகர்களுடன் பணியாற்றியதை விவரிக்கிறது. அண்ணாதுரையிடம் சினிமா, அரசியல் கற்றதை சொல்கிறது. சினிமா பற்றி சுவாரசியமாக விரிகிறது. அரசியலில் எம்.ஜி.ஆர்., வாரிசை வளர்க்காததற்கு காரணம் கூறப்பட்டுள்ளது. சினிமாவில் விபத்துகள், விபரீதங்களை விவரிக்கிறது. காட்சி, வசனம் வழியாக அதிகாரத்தை பிடிக்கும் நடிகர்களின் நுட்பம் சொல்லப்பட்டுள்ளது. அந்த கால சினிமாவை அறிய உதவும் நுால். – டி.எஸ்.ராயன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை