/ கட்டுரைகள் / அறமே வெல்லும்

₹ 100

அறத்தை வலியுறுத்தி படைக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு நுால். இளைஞர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் அமைந்துள்ளது. கொங்கு இதழில் சிறப்பாசிரியராக எழுதிய தலையங்கங்கள், வானொலியில் ஆற்றிய உரைகள் கட்டுரைகளாக தரப்பட்டுள்ளன. ஒவ்வொரு கட்டுரையும் சீரிய கருத்தை வலியுறுத்தி, அறிஞர்களின் வாழ்க்கையில் இருந்து சம்பவங்களாக முன்வைப்பது சுவாரசியம் ஏற்படுத்துகிறது. மனிதர்களுக்கு அறிவு முதன்மையா, பண்பு முதன்மையா என்பதை விவரித்து கவனத்தை ஈர்க்கிறது. விழுந்தவரை துாக்கு, விழுந்து விடாமல் துாக்கு என்பது போன்ற அறமொழிகளும், வாழ்க்கை குறிப்புகளும் வருட அடிப்படையில் பட்டியலிடப்பட்டுள்ளன. அறமே வெல்லும் என வலியுறுத்தி, மனதில் நிற்கும் கட்டுரைகளின் தொகுப்பு நுால். – ஊஞ்சல் பிரபு


புதிய வீடியோ