/ வாழ்க்கை வரலாறு / அம்பேத்கரும் அயோத்தி தாசரும்
அம்பேத்கரும் அயோத்தி தாசரும்
சமூக சீர்திருத்தவாதிகள் அயோத்தி தாசர், அம்பேத்கர் பற்றி உரைக்கும் நுால். பிறப்பை அடிப்படையாக கொண்ட ஏற்றத்தாழ்வுகளை அழிக்க இருவரும் பாடுபட்டதை விவரிக்கிறது. காந்திஜி உண்ணாவிரதம், அம்பேத்கர் ஒரு தொலைநோக்கு சீர்திருத்தவாதி, அயோத்தி தாசரின் பூர்வீக வாழ்க்கை, படைப்புலகம் போன்ற தலைப்புகளில் கருத்துகள் தரப்பட்டுள்ளன. அம்பேத்கர் தன் மீது அக்கறை கொண்ட ஆசிரியர் பெயரையே வைத்து கொண்டதை கூறுகிறது. அயோத்திதாசரின் பூர்வீக வரலாற்றை தருகிறது. காத்தவராயன், அயோத்தி தாசர் ஆனதை விளக்குகிறது. பன்மொழி புலமை கொண்டதால் பண்டிதர் என்று அழைக்கப்பட்டதை தெரிவிக்கிறது. சமூக சீர்திருத்த தகவல்களை தரும் நுால். – பேராசிரியர் ரா.நாராயணன்




