/ வாழ்க்கை வரலாறு / ஆதி சங்கரர்
ஆதி சங்கரர்
ஆதி சங்கரர் வாழ்க்கை வரலாற்றை எளிய முறையில் கூறும் சுருக்கமான நுால். பாரதம் முழுதும் 72 சமயங்கள் எழுந்திருந்த காலத்தில் வன்முறை, பஞ்சம், உயிர்பலி மிகுந்திருந்த போது சனாதன தர்மத்தை ஆதி சங்கரர் நிலைநிறுத்தியது கூறப்பட்டுள்ளது. எட்டு வயதிலே எல்லாமும் கற்று முடித்ததை தருகிறது. நோயால் பாதிக்கப்பட்ட தன் தாய் பூர்ணா நதிக்கு நடந்து செல்ல முடியாத நிலையில், நதியை வீட்டுக்கு வரவழைத்த சம்பவம் வியப்பில் ஆழ்த்துகிறது. முதலை வாயில் சிக்கி மரணப் பிடியில் இருந்த போது, துறவியாக செல்ல தாயிடம் அனுமதி பெற்றதை எடுத்துக் கூறுகிறது. பரமாத்மா, ஜீவாத்மா ஒன்றே என அத்வைத தத்துவத்தை பரப்பியதை கூறுகிறது. ஆதி சங்கரரை கண் முன் கொண்டு வந்து நிறுத்தும் அற்புத நுால். – முனைவர் மா.கி.ரமணன்




