/ கதைகள் / வெற்றிப்பதக்கம்

₹ 290

தீய பழக்கங்களில் இருந்து ஒதுங்கியிருக்க வழிகாட்டும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். தவறை சுட்டிக்காட்டினால் பழி வாங்காமல் திருத்திக்கொள்ள வேண்டும் என, ‘தீமைக்கு பிரதி தீங்கு அல்ல’ கதை சுட்டிக் காட்டுகிறது. தந்தையின் குடி பழக்கத்தை மாற்றும் சிறுவன் தந்திரத்தை, ‘பாதி தப்புக்கு அடியா’ கதை புரிய வைக்கிறது. சிறுவனை சுறுசுறுப்பாக்க செய்த யுக்தியை, ‘நான் என்ன செய்யட்டும்’ கதை படிப்பினையாக தருகிறது. தியாகம், நேர்மையின் பரிசு, மன அழகு, காப்பாற்றப்பட்ட நட்பு, வறுமையில் செம்மை, துரோகி பறவை, ஆந்தையின் ஆசை, சிங்கத்தின் பேராசை போன்ற கதைகள், தைரியம், விடாமுயற்சி, சுறுசுறுப்பு, இரக்கம், தன்னம்பிக்கை உணர்வுகளை வளர்க்க உதவுகின்றன. சிறுவர் – சிறுமியருக்கு உகந்த நுால். – டி.எஸ்.ராயன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை