/ வரலாறு / த டர்னிங் பாயிண்டு (ஆங்கிலம்)

₹ 100

வாழ்க்கை முறையால் சமூகத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியோர் பற்றிய வரலாறாக மலர்ந்துள்ள நுால். கருத்துகள் ஆழமாக விவரிக்கப்பட்டுள்ளன. சைவக் குரவர்கள் நால்வர், வைணவப் பெரியார் மூவர், துறவியர் ஏழு பேர், மூத்த முனிவர் வால்மீகி என 15 ஞானிகள் கருத்துகள் விவரித்து கூறப்பட்டுள்ளன. தொண்டரடிப்பொடி ஆழ்வார், இந்திரலோகம் கூட வேண்டாம் என சொன்னதை, ‘சொர்க்கத்தை தொலைப்பேன்’ என கவித்துவமாக கூறப்பட்டுள்ளது இன்புறத்தக்கது. திருவெண்காடர் என்ற பட்டினத்தார் பெயரை தலைப்பில் தாங்கிய கட்டுரையில், ‘காதற்ற ஊசியும் கடைவழிக்கு வாராது’ என்பது கச்சிதமாக வார்த்தைகளால் விவரிக்கப்பட்டுள்ளது. ஆன்மிக ஞானம் பெற விரும்புவோர் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம். – சீத்தலைச்சாத்தன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை