/ கதைகள் / தகிப்பு

₹ 500

ஜாதி கொடுமையை மையமாக வைத்து படைக்கப்பட்டுள்ள நாவல். வெறியுடன் எந்த செயலும் கூடாது என எச்சரிக்கை செய்கிறது. கிராமங்களில் பஞ்சாயத்து எப்படியெல்லாம் செயல்படுகிறது என வெட்ட வெளிச்சமாக்குகிறது. உண்மை நிகழ்ச்சி பலவாறு திரிக்கப்பட்டு கதை செல்கிறது. கதை நாயகி ஸ்கூட்டியை சரி செய்து உதவுகிறான் இளைஞன். அவனது ஜாதி பின்புலம் அறிந்த பெண்ணின் ஊர் இளைஞர்கள் தகராறு செய்து, அடிதடியில் ஈடுபடுவதை எடுத்துக்காட்டுகிறது. பஞ்சாயத்து முன்னிலையில் விசாரணையாக கதை நீள்கிறது. முடிவில் திருமணம் வரை செல்கிறது. போலீஸ் ஸ்டேஷன், மருத்துவமனை என கதைக்களம் விறுவிறுப்பாக விரிகிறது. உரையாடல்கள் வழியாக கதாபாத்திர குணங்கள் வெளிப்படுகின்றன. சமத்துவத்தை மையப்படுத்திய நாவல் நுால். – பேராசிரியர் ரா.நாராயணன்


முக்கிய வீடியோ