/ கட்டுரைகள் / சிங்கப்பூர் – 60
சிங்கப்பூர் – 60
சிங்கப்பூரின் செழிப்பையும், வளர்ச்சியையும் அறிய தரும் நுால். கடந்த 60 ஆண்டுகளில் சிங்கப்பூரின் வளர்ச்சி விபரங்கள், 60 செய்திகளாக தரப்பட்டுள்ளன. சிங்கப்பூர் நாடு 733 சதுர கிலோமீட்டர் பரப்பளவு உடையது. இது எப்படி செழிப்பானது என விவரிக்கிறது. பல இன, மொழி பேசும் மக்களின் வளமைக்கு ஆட்சி திறனே காரணம் என அறிய தருகிறது. ஆண்டுக்கு 11 நாட்கள் மட்டும் தான் இந்த நாட்டில் பொது விடுமுறை. இது, உழைப்புக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை புரிய வைக்கிறது. பல வண்ணங்களில் மலரும் ஆர்கிட் தான் இதன் தேசிய மலர். இது ஒருமைப்பாட்டை குறிப்பிடுகிறது. மாற்றத்தை ஏற்றுக் கொள்ளும் மனப்பாங்குள்ள மக்கள் பற்றிய விபரங்களும் உள்ளன. சிங்கப்பூரை தெரிந்து கொள்ள உதவும் நுால். – சீத்தலைச்சாத்தன்




