/ சுய முன்னேற்றம் / நம்பிக்கை நமதே!

₹ 200

மனிதர்களுடன் நல்லவிதமாக பழகுவதற்கு நம்பிக்கையூட்டும் நுால். நட்பு இதயத்தின் ஆழத்தில் இருந்து வெளிப்பட வலியுறுத்துகிறது. அன்றாட வாழ்வில் நன்றி உணர்வை பேண வேண்டியதன் அவசியத்தை நாட்குறிப்பாக எழுதக் கூறுகிறது. துன்பத்தை இன்பமாக மாற்றும் நுட்பத்தைச் சொல்கிறது. இரவல் கொடுப்பது, வாங்குவதில் உள்ள எல்லையை வரையறுக்கிறது. கடின உழைப்புக்கு ஏற்ப உடலுக்கு ஓய்வு கொடுப்பதால் ஏற்படும் நன்மையை விளக்குகிறது. யார் அறிவுரை கூறினாலும் தயக்கமின்றி கேட்க அறிவுரைக்கிறது. அறத்துடன் வாழ வலியுறுத்துகிறது. பொது அறிவில் திறனுடன் இருக்கச் சொல்கிறது. அனுபவத்தை ஆசானாக ஏற்க கூறுகிறது. மனிதனை மாற்றும் வல்லமை பணத்திற்கு இருப்பதால், எச்சரிக்கை தேவை என உரைக்கும் நுால். – டி.எஸ்.ராயன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை