/ இசை, இயல், நாடகம் / மை டேய்ஸ் வித் பாஷா (ஆங்கிலம்)
மை டேய்ஸ் வித் பாஷா (ஆங்கிலம்)
நடிகர் ரஜினி நடித்த பாட்ஷா சினிமா தயாரிப்பு அனுபவத்தை பகிரும் நுால். படப்பிடிப்பில் நடந்த நிகழ்வுகளை அள்ளி கொடுக்கிறது. இசையமைப்பாளர் தேவாவின் எளிமையும் பெருமையும் பேசப்பட்டுள்ளது. படித்தவர் முதல் பாமரர் வரை, இயக்குநரை பாராட்டிய விதம் நெகிழும்படியாக உரைக்கப்பட்டுள்ளது. படம் இயக்கிய போது ஏற்பட்ட அனுபவம், மர்ம நாவல் வாசிப்பது போல் தரப்பட்டுள்ளது. ஒரு படம் வெற்றி அடைய, இயக்குநருக்கும், கதாநாயகனுக்கும் பரஸ்பர அன்பும் நம்பிக்கையும் இருக்க வேண்டும் என எடுத்துரைக்கிறது. இசையமைப்பாளர் இளையராஜா கோபத்திற்கு ஆளான விதம் அருமையாக சொல்லப்பட்டுள்ளது. சினிமா படப்பிடிப்பு அனுபவத்தை கூறும் நுால். – டாக்டர் கார்முகிலோன்




