/ வாழ்க்கை வரலாறு / மாவீரன் பகத் சிங்
மாவீரன் பகத் சிங்
இந்திய சுதந்திர போரில் உயிரை தியாகம் செய்த பகத் சிங் வாழ்க்கை வரலாற்று நுால். புரட்சி நடவடிக்கைகள் குறித்த தெளிவான செய்திகளை கொண்டுள்ளது. பகத் சிங்கின் இளமை பருவ நிகழ்வுகள் முதலில் சொல்லப்பட்டுள்ளன. தொடர்ந்து சுதந்திர போராட்டத்தில் அர்ப்பணிப்புடன் செயல்பட்ட நடவடிக்கைகள் தனித்தனியாக தரப்பட்டுள்ளன. ஆங்கிலேயருக்கு எதிரான தீவிர செயல்பாடுகள் படிப்படியாக விளக்கப்பட்டுள்ளன. புத்தகம் 16 அத்தியாயங்களாக பகுத்து தகவல்கள் தரப்பட்டுள்ளன. பகத் சிங் படைப்புகள் மற்றும் தொண்டர்களுக்கு எழுதிய கடிதங்கள் குறித்த விபரங்கள் இறுதி பகுதியில் தரப்பட்டுள்ளன. ஒவ்வொரு செய்திக்கும் தக்க ஆதாரங்கள் முன்வைக்கப்பட்டு உள்ளன. பகத் சிங்கின் தியாக வாழ்வை அறிய தரும் நுால். – ஒளி




