/ ஆன்மிகம் / கிருஷ்ண லீலா (பாகம் – 1)

₹ 300

புராண சம்பவங்களை முன் வைத்து முன்னேற்றத்துக்கு வழிகாட்டும் ஆன்மிக நுால். பகவான் கிருஷ்ணரின் உருக்கமான செயல்களை பல்சுவை கலந்து விவரித்து, எளிய நடையில் உருவாக்கப்பட்டுள்ளது. கதை மற்றும் கட்டுரை கலந்த வடிவில் தொகுப்பாக மலர்ந்துள்ளது. கிருஷ்ணரின் பல்வேறு பருவ லீலைகளில் பொதிந்துள்ள போதனைகள் கவரும் வண்ணம் தரப்பட்டுள்ளன. முதல் பகுதி, ‘யார் இந்த கிருஷ்ணன்’ என்ற தலைப்பில் அமைந்துள்ளது. பகவான் கிருஷ்ணரை பல கோணங்களில் அறிமுகம் செய்கிறது. யாராலும் அடக்க முடியாத குழந்தை, பரிதவிக்க வைக்கும் பயங்கரமான குறும்புக்காரன், மாயப் புல்லாங்குழல் இசைஞன், தென்றலின் அசைவுகளுடன் நடனம் ஆடும் நாட்டிய கலைஞன், வசீகரிக்கும் காதலன், தீரமிக்க போர் வீரன், ஈவு இரக்கமின்றி எதிரிகளை ஒழிப்பவன், அட்டகாசமான அரசியல்வாதி, அரசர்களை உருவாக்கி அரியணையில் அமர்த்தும் ராஜதந்திரி, கசடுகளற்ற கண்ணியமான மனிதன், உன்னதமான யோகி என கிருஷ்ணரின் பன்முக லீலைகளை எளிய எழுத்து சித்திரங்களாக வரைந்து காட்டுகிறது. தொடர்ந்து, ஒவ்வொரு முகத்தின் பின்னணியிலும் இருக்கும் இனிய கதை தெளிவாக சித்தரிக்கப்பட்டுள்ளது. புராண கதாபாத்திரங்கள் வாயிலாக குணநலன்களும், லீலைகளும் நெகிழ்ச்சியாக உரைக்கப்பட்டுள்ளன. வாழ்வில் அன்றாடம் சந்திக்கும் நெருக்கடிகளை, சுலபமாக கடந்து செல்வதற்கு உரிய அறிவுரைகள் இந்த லீலைகள் வழியாக சொல்லப்பட்டுள்ளன. புராணக் கதைகளின் பின்னணியும் விளக்கப்பட்டுள்ளது. பகவான் கிருஷ்ணரின் லீலைகளை புரிந்து கொள்ள வாழ்வில் எத்தகைய நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என ஒவ்வொரு படைப்பும் நுட்பமாக போதிக்கின்றன. அன்றாட செயல்களை விளையாட்டு போல் நோக்கினால், மகிழ்ச்சி யுடன் வாழலாம் என்கிறது. வாழ்க்கையை நிதானமாக அணுகி, வெற்றிகள் பெறுவதற்கு மனதை தயார்படுத்தும் வழிமுறைகள் நிறைந்துள்ள ஆன்மிக நுால். – சிவா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை