/ ஆன்மிகம் / கோடி புண்ணியம் அருளும் கோவிந்தபுரம்
கோடி புண்ணியம் அருளும் கோவிந்தபுரம்
பக்தி பெருக்கால் கும்பகோணம், கோவிந்தபுரம் கிராமத்திற்கு குடி பெயர்ந்து பெற்ற அனுபவ தொகுப்பாக மலர்ந்துள்ள நுால். ஸ்ரீ போதேந்திர சுவாமிகள் அதிஷ்டானம், கும்பகோணம் ஆடுதுறை அருகே கோவிந்தபுரத்தில் அமைந்துள்ளது. திருப்பணிகள் செய்த கோவிந்த தீட்சிதருக்கு மதுரை மன்னர் கி.பி., 1583ல் தந்த கிராமம் இது. காஞ்சி சங்கர மடத்தின் 59ம் பீடாதிபதி அவதரித்த தலம். நாம கீர்த்தனையை பிரபலப்படுத்திய தலம். திருவண்ணாமலையில் ஜீவசமாதி அடைந்த யோகி ராம் சுரத்குமாருக்கு இங்கு ஆசிரமம் உள்ளது. இங்குள்ள தபோவனத்தில் ஆதிசங்கரர் முதல் ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வரை குருமார்களை ஒரே இடத்தில் தரிசிக்கலாம் என கூறும் நுால். – சீத்தலைச்சாத்தன்




