/ வாழ்க்கை வரலாறு / பிரடெரிக் அகஸ்டஸ் நிக்கல்சன்
பிரடெரிக் அகஸ்டஸ் நிக்கல்சன்
இந்தியாவில் கூட்டுறவு இயக்கம் மலர வழிவகுத்த ஆங்கிலேய அதிகாரியின் வாழ்வு, பணிகளை விவரிக்கும் நுால். இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சி நிர்வாகம் என்ற தலைப்பில் துவங்கி, 12 அத்தியாயங்களில் புத்தகம் உள்ளது. கூட்டுறவு இயக்கத்தை இந்தியாவில் மலர வைக்க அகஸ்டஸ் நிக்கல்சன் மேற்கொண்ட வளர்ச்சி பணிகள் குறித்த விபரங்கள் வரலாற்று ரீதியாக தொகுத்து தரப்பட்டுள்ளன. தமிழ் மொழிக்காக புதிய அகராதி திட்டம் ஒன்றை வகுத்து செயல்பட வைத்த உன்னத பணி குறித்த விபரங்களும் சொல்லப்பட்டுள்ளன. மீன்வளத்துறையை உருவாக்கி, கடற்கரையோர மக்கள் வாழ்வில் மலர்ச்சியை ஏற்படுத்திய செயல்பாட்டையும் விவரிக்கிறது. வளர்ச்சியில் ஆர்வம் காட்டி செயல்பட்ட அதிகாரியின் வாழ்க்கை வரலாற்று நுால். – ஒளி




