/ வாழ்க்கை வரலாறு / சக்கரவர்த்தி கரிகாலன்
சக்கரவர்த்தி கரிகாலன்
கல்லணை உருவாக்கிய கரிகாலன் பற்றிய நுால். கரிகால் பெருவளத்தான், திருமாவளவன் என போற்றி கொண்டாடப்படும் சக்கரவர்த்தி வாழ்க்கை சரித்திரம் சுவைபட சொல்லப்பட்டுள்ளது. கரிகால் வளவனின் பிறப்பு, வளர்ந்த விதம், தாய்மாமன் ஆதரவு, பகை வென்ற திறம், அரியணையில் அமர்ந்த விதம் விவரிக்கப்பட்டு உள்ளது. வெண்ணிப்போரில் தோற்கடிக்கப்பட்ட சேர மன்னன் பெருஞ்சேரலாதன், வடக்கிருந்து உயிர் நீத்ததை அறிய தருகிறது. சேரன், பாண்டியன் மற்றும் பல்வேறு குறுநில மன்னர்கள் சேர்ந்து போராடியும் கரிகாலனிடம் தோற்றதை குறிப்பிடுகிறது. காவிரியில் நீந்தி, கடலில் சேர்ந்து, மீண்டு வந்த விதமும் திறம்பட உரைக்கப்பட்டுள்ளது. கல்லணை கட்டிய விதத்தையும் தரும் நுால். – டாக்டர் கார்முகிலோன்




