/ வரலாறு / அரியணை முதல் அறப்போர் வரை

₹ 480

இந்திய சுதந்திரம், சமூக நீதி, மொழி வளர்ச்சி, பெண் விடுதலை போராட்டங்களில் பங்கேற்ற 49 ஆளுமைகளின் அனுபவ தொகுப்பு நுால். தேசத்தில் எழுந்துள்ள வளர்ச்சி, சமூக முன்னேற்றத்தின் பின்னணியில் உள்ள தியாகம், போராட்டங்கள், வலிகளை உணர வைக்கிறது. காந்திஜி, கஸ்துாரிபாய், வ.உ.சி., காமராஜர், அம்பேத்கர், பாரதி போன்ற தேசிய தலைவர்கள், மூவலுார் ராமாமிருதம் அம்மையார், பாலாமணி, அம்புஜம்மாள் போன்ற போராளிகள், தமிழ்மொழி, இலக்கியம், சமூக சீர்திருத்தத்திற்கு அர்ப்பணித்த அறிஞர், எழுத்தாளர், பத்திரிகையாளர்களில் அதிகம் பேசப்படாத, ஆனால் தேச வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்தோர் பற்றிய தகவல்கள் தரப்பட்டுள்ளன. வரலாற்று தகவல்களுடன் உணர்ச்சியை உருவாக்கும் விவரிப்பு அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் உள்ளது. வாழ்க்கை சம்பவங்கள் வழியாக நெறி, தியாகம், நேர்மை போன்ற மதிப்புகள் இயல்பாக வெளிப்பட்டுள்ளன. வரலாறு படிக்கிறோம் என்ற உணர்வை விட, தியாக சீலர்களின் வாழ்க்கையை நெருக்கமாக பார்க்கிறோம் என்ற அனுபவமே கிடைக்கிறது. பள்ளி, கல்லுாரி மாணவர் களுக்கு மதிப்புக் கல்வியாகவும், போட்டித் தேர்வில் பங்கேற்போருக்கு பொது அறிவு மற்றும் வரலாற்று பின்னணியை புகட்டவும் உதவும். பேச்சுப் போட்டி, கட்டுரை மற்றும் பட்டிமன்ற விவாதங்களுக்கு பயன்படும். குறிப்பாக, ‘தேசபற்று எப்படி உருவாகிறது’ என்பதற்கு தெளிவான பதிலாக அமையும். அதிகார மையத்தின் செயல் பாடுகளாக இல்லாமல், மக்களால் உருவான வரலாறு பற்றி பேசுகிறது. ஜாதி, பாலினம், மொழி, வர்க்கம் என்ற எல்லைகளை உடைத்து முன்னேறியோரின் கதைகள், இன்றைய சமூகத்திற்கு வழிகாட்டியாக அமைகின்றன. இது வாழ்க்கையை கற்றுத்தரும் பாடநுால்; சமூக விழிப்புணர்வு ஆவணம். இந்த தேசம் எப்படி உருவானது... அதில் நம் பொறுப்பு என்ன... என்ற கேள்விகளை எழுப்பும். இளம் தலைமுறையினர் படிக்க வேண்டிய புத்தகம். -– இளங்கோவன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை