/ ஆன்மிகம் / அகஸ்திய பக்தவிலாஸம்
அகஸ்திய பக்தவிலாஸம்
சேக்கிழார் இயற்றிய பெரிய புராணத்தை அடியொற்றி அகஸ்தியர் வடமொழியில் இயற்றிய பக்தவிலாஸம் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. பெரிய புராணத்தில் இல்லாத செய்திகள் கூடுதலாக இடம் பெற்றுள்ளன. குறிப்பாக நாயன்மார் மனைவியர் பெயரும் இடம் பெற்றுள்ளன. நாயன்மாரில் ஒருவரான விறன்மிண்டாருக்கு மதில் மீது இறைவன் காட்சியளித்த செய்தியும் உள்ளது. துாய்மையின்றி கோவிலுக்கு சென்ற சுந்தரரை, விறன்மிண்டார் கொல்ல முயன்றதாக கூறப்பட்டுள்ளது. திருஞானசம்பந்தர், அங்கயற்கண்ணி மீது பதிகம் பாடிய செய்தி இடம் பெற்றுள்ளது. அடியவர் பெயர்கள் மாறியிருந்தாலும், வரலாறு எளிய நடையில் உரைநடையாக கூடுதல் செய்திகளுடன் அமைந்துள்ளது. ஆன்மிக அன்பர்களை ஈர்க்கும் நுால். – புலவர் சு.மதியழகன்




